சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்நிலையில் படம் குறித்து அனிருத் இன்ஸ்டா பதிவு செய்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் இன்று (பிப்.6) உலகம் முழுவதும் வெளியாகிறது. த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தனது இன்ஸ்டாவில், “கதை இன்னும் முடியல, தொடருது பாரு” என பதிவிட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பின் அஜித்குமார் படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் FDFS பார்த்த ரசிகர்கள் படம் குறித்து X தளத்தில் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். அதன்படி, ரசிகர் ஒருவர், “முதல் பாதி மிகவும் நன்றாக இருக்கிறது. அஜித் நடிப்பு சூப்பர்” என குறிப்பிட்டுள்ளார். பலரும், “அதிவேக ஆக்ஷன், மனதைத் தொடும் கார் ரேஸ்” என பதிவிட்டுள்ளனர்.