மும்பை: இமயமலையில் புதிய உணவகத்தை கட்டியுள்ளார் நடிகை கங்கனா . இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை கங்கனா ரனாவத், இமய மலைப்பகுதியில் புதிய உணவகத்தை திறக்க உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த உணவகத்தில் இமாசலபிரதேசத்தின் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வழங்கப்படும்.
இது எனது சிறுவயது கனவு. அந்த கனவு தற்போது உயிர் பெறுகிறது. இந்த உணவகம் காதலர் தினத்தையொட்டி வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.