சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்டுள்ள ஒரு பதிவு அஜித்தை சாடியுள்ளதாக பரவலாக பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில், “நல்லதை செய்தால் நல்லதே கிடைக்கும். மற்றதை பற்றி வருத்தப்படாமல் இருந்தாலே நன்மைகள் நடக்கும்” என பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. ‘விடாமுயற்சி’ படம் வெளியான நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த பதிவு அஜித்தை சாடி போடப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது.