புதுடில்லி: டெல்லி 7 மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 10-ல் இடைத் தேர்தல் நடக்கிறது.
மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் 4, ஹிமாச்சல் பிரதேசத்தில் 3, உத்தரகண்டில் 2, தமிழ்நாடு, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே இந்த இடைத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.