தேவையானவை
கோதுமை மாவு – 200 கிராம்
கேரட் துருவல், கோஸ் துருவல்,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய்,
வெங்காயம் – தலா ஒரு சிறிய கிண்ணம்
பச்சைப் பட்டாணி – 100 கிராம்
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாகத் திரட்டவும். சப்பாத்திகளை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடாக்கி, கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். பிறகு இதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.