புதுடெல்லி: கங்கை நீரை வீட்டுக்கு எடுத்து வரலாமா? கொண்டு வரக் கூடாதா என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க .
காசிக்கு புனிதப் பயணம் மேற்கொள்வோர் கங்கை நீரை வீட்டுக்கு எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், நீரை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது என கூறப்படுகிறது.
ஏனெனில், காசியில் அரிச்சந்திரா மற்றும் மணிகர்ணிகா படித்துறையில் நாள் முழுவதும் சடலங்கள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் நதியில் தள்ளப்படுகிறது. இந்த நீரை எடுத்து வருவதன் மூலம் காசியில் எரிக்கப்பட்ட உடலின் ஆத்மா சாந்தியடைவது தடைபடுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் புனித நீராக கங்கை நீர் கருதப்படுவதால் பலரும் இதை வீட்டின் பூஜையில் வைத்து பூஜிப்பதும் குறிப்பிடத்தக்கது.