சென்னை: ஏதாச்சு ஆசையா செஞ்சு சாப்பிடலாம்னு ஆசைப்படுறப்போ, வீட்டில் எதுவுமே இருக்காது. இருக்கிறது வெச்சு சமைக்கலாம்னு ரொம்ப யோசிச்சு, யோசிச்சு கடைசில ஆர்டர் பண்ணியே சாப்பிடலாம்னு முடிவுக்கு வந்திருவோம். இருக்கிற பொருள் வெச்சு நம்ம விரும்பியதை சமைக்கலாம். உதாரணமா, பிரட் இல்லாமலும் சாண்ட்விச் செய்யலாம்.
பிரட் இல்லாம சாண்ட்விச்சா? உண்மை தான். சாண்ட்விச் செய்ய பிரட் தேவையில்லை, ஆனால் வீட்டில் கண்டிப்பாக உருளை கிழங்கு இருக்க வேண்டும். ஈஸியா 10 நிமிஷத்தில் பிரட் இல்லாமே சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்.
உருளைக்கிழங்கு – 4
கோதுமை /மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 1(சிறியது)
ஸ்வீட் கார்ன் – 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய கேரட் – 1
சீஸ் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
மிக்ஸ்டு ஹேர்ப்ஸ் – ½ டீஸ்பூன்
செய்முறை: முதலில் உருளைக்கிழங்கு கழுகு சுத்தம் செய்த பிறகு, பெரிய அளவுகளில் துருவி கொள்ளவும். சிறிய துளை உள்ள துருவியை பயன்படுத்த வேண்டாம். துருவிய உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் அலசி எடுக்கவும்.
இதனுடன் தேவையான அளவு கோதுமை மாவு அல்லது மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பின் துருவியே உருளைக்கிழங்கை தோசை கல்லில் தட்டி, அழுத்தி விடவும். மூடி போட்டு 3-5 நிமிடங்கள் வேகவிடவும். பின்பு மெதுவாக திருப்பி போட்டு மறுபுறமும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வேகும் சமயத்தில் தேவையான வெங்காயம், தக்காளி வெள்ளரிக்காய், ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும். இதனுடன் துருவிய சீஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்த பிறகு, ஒரு பக்கத்தில் மட்டும் தயாராக வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து மூடவும். சீஸ் உருகி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். ஆறிய பின் துண்டுகள் போட்டு பரிமாறலாம். உருளைக்கிழங்கின் நடுவே வைக்கும் காய்கறி கலவையை உங்கள் விருப்பம் மற்றும் சுவைக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளலாம்.