சென்னை : நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழா நடந்துள்ளது.
கோலிவுட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்புத் திறமையை விக்ரம் பிரபு நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை விழா நேற்று (பிப்.10) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், ஜெகதீஷ் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான சுரேஷ் இயக்கவுள்ளார்.