விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் லலித் குமார். இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர். இவரது மகன் எல்.கே.அக்ஷய் குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தின் கதை நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது, இதை ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழன் எழுதியுள்ளார். சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அக்ஷய் குமாருடன் விக்ரம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
‘டாணாக்காரன்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு அதன் இயக்குனர் கதையில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக பிலோமின் ராஜ், கலை இயக்குநராக ஸ்ரீமன் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் அக்ஷய் குமாருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.