சென்னை : மத்திய அரசு கொண்டு வந்த பிரதமர் மருந்தகத்தை காப்பியடித்து
முதல்வர் ஸ்டாலின் முதல்வர் மருந்தகம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என பாஜக தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், வரும் 24ம் தேதி 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “10 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி மக்கள் மருந்தகங்களை திறந்தார்.
இதைவிட காப்பி அடிக்கிற ஒரு முதல்வரை இந்தியாவிலேயே பார்க்க முடியாது. இதன் மூலம், ‘ஸ்டிக்கர் ஸ்டாலின்’ என்பது முற்றிலுமாக நிரூபணமாகியுள்ளது” என விமர்சனம் செய்தார்.