மும்பை: பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இந்திய மலர் உற்பத்தியாளர்கள் கவுன்சில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அவற்றை தடை செய்துள்ளது. ஆனால் 30 மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “மத்திய அரசு மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் பட்டியலில் பிளாஸ்டிக் பூக்கள் ஏன் சேர்க்கப்படவில்லை. பிளாஸ்டிக் பூக்களை மறுசுழற்சி செய்ய முடியுமா? அவை மக்கும் தன்மை கொண்டவையா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் மனுதாரருக்கு 2 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.