வாஷிங்டன் : வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு டிரம்ப்பை மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பில், வர்த்தகம், வரி விதிப்பு, குடியேற்றம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.
குறிப்பாக டிரம்ப் இன்று விதித்த பதிலடி வரி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறதாம். அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இதில் இந்தியாவிற்கு பாதகமாக உள்ள அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.