மும்பை: இந்திய வீரர்கள் மனைவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக தெரியுங்களா?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய வீரர்கள் தங்களது மனைவிகளை அழைத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BCCI-யின் புதிய பயணக் கொள்கை இந்த தொடரில் முதல் முறையாக அமலுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச்செல்வதால் வீரர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதை எடுத்து வீரர்கள் தங்களின் மனைவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.