கொச்சி: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து ஏர் கேரளா நிறுவனத்திற்கு தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது. 2025ல் உள்நாட்டு சேவைகளை ‘ஏர் கேரளா’ தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான சேவை நிறுவனமாக ஏர் கேரளா மாறியுள்ளது.
ஏர் கேரளா முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு முதல்வர் உம்மன் சாண்டியின் கீழ் கேரள அரசால் தொடங்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் வாழும் மலையாள மக்களின் கனவுத் திட்டமாக இது அறியப்பட்டது. வளைகுடா நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேறவில்லை. இருப்பினும், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் தொழில் செய்து வரும் அபி அகமது மற்றும் அயூப் கல்லடா ஆகியோர் இந்தத் திட்டத்தைத் தொடங்க ஆர்வம் காட்டினர். கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளாவை நிறுவினார்.
இதையடுத்து ஏர் கேரளா இணையதள டொமைனை கைப்பற்றி நிறுவனம் தொடங்க ஆர்வம் காட்டினர். அதன்படி, கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு அது சாத்தியமாகியுள்ளது. சில நாட்களுக்கு முன், ஏர் கேரளா விமான சேவைக்கு தடையில்லா சான்றிதழை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுடன் ஏர் கேரளா 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று விமானங்கள் மூலம் விமான சேவை தொடங்கப்பட்டு படிப்படியாக வளைகுடா நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
“கேரளாவுக்கு நான்கு விமான நிலையங்கள் இருந்தாலும், அதற்கு சொந்த விமான சேவை இல்லை. எங்கள் நிறுவனம் அந்த இடைவெளியை நிரப்பும்” என்று அயூப் கல்லாடா கூறினார்.