சென்னை: பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி சென்னை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போலவும், AK 47 துப்பாக்கி வைத்திருப்பது போலவும் வன்முறை தூண்டும் வகையில் மார்ஃபிங் செய்த படங்களை சீமான் பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக அவர் இப்படி செய்வதாகவும் சார்லஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.