தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை/சன்னா – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
தண்ணீர் – தேவையான அளவு கிரேவிக்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 4
சீரகம் – 1/4 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2 (அரைத்தது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
புதினா – சிறிது
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் கருப்பு கொண்டைக்கடலையை சுடுநீரில் போட்டு மூடி வைத்து, குறைந்தது 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலையை போட்டு, அத்துடன் நறுக்கிய வெங்காயம், சீரகத் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, எண்ணெய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், பிரியாணி இலை மற்றும் கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி ஒருமுறை கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அரைத்த தக்காளியையும் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கருப்பு கொண்டைக்கடலை கிரேவி தயார்.