சென்னை : முன்மொழி பாடத்திட்டம் குறித்து முதல்வருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
“தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டம் இருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?. பணம் இருந்தால் மட்டும் தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதல்வர்?” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.