மகளிர் ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி வதோதராவில் முன்னாள் சாம்பியன் மும்பை மற்றும் டெல்லி அணிகள் எதிர்கொண்டன. டாஸ் வென்ற டெல்லி, முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி, மும்பை களமிறங்கிய போது, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களையே எடுத்து அதிர்ச்சி கொடுத்தது. யஸ்டிக்கா பாட்டியா 11, ஹேய்லே மேத்தியூஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தினர். அதே நேரத்தில், கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடியாக விளையாடி 42 (22) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய நட் ஸ்கீவர் 13 பவுண்டரியுடன் 80* (59) ரன்கள் குவித்து அணிக்கு சிறந்த தொடக்கத்தை வழங்கினார். ஆனால், எமிலியா 9, சஜனா 1, அமன்ஜோத் கௌர் 7 ரன்களில் அவுட்டாகி, மற்ற வீராங்கனைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தின.
டெல்லி பவுலர்களில், அதிகபட்சமாக அனபெல் சதர்லாந்து 3, சீக்கா பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர், 165 ரன்களை துரத்திய டெல்லி, 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் சபாலி வர்மா 43 (18) ரன்கள் அடித்து அபாரமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால், அவர் ஃபெவிலியன் திரும்பிய பின்னர், 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் மெக் லென்னிங் 15 (19) ரன்களில் அவுட்டாகி, ஏமாற்றத்தை ஏற்படுத்தினார். அடுத்ததாக வந்த ஜெமிமா 2, அனபெல் 13, அலிஸ் கேப்சி 16 ரன்களில் அவுட்டாகி, பின்னடைவை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், மிடில் ஆர்டரில் இளம் வீராங்கனை நிக்கி பிரசாத் நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம், மிரட்டலாக விளையாடிய சாரா பிரைஸ் 21 (10) ரன்கள் மற்றும் சிகா பாண்டே 2 ரன்களில் அவுட்டானனர். இதனால், கடைசி ஓவரில் டெல்லிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது, நிக்கி 35 (33) ரன்களில் அவுட்டாகி விடுகிறார்.
இப்போது, கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டபோது, அருந்ததி ரெட்டி நேர்த்தியாக செயல்பட்டு டைவ் அடித்து டபுள் எடுத்தார். ஆனால், டைவ் அடிக்கையில் பேட் வெள்ளைக்கோட்டில் முழுமையாக தொடவில்லை. இதையடுத்து, மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “இது அவுட்டில்லையா?” என மூன்றாவது நடவரிடம் கேள்வி எழுப்பின.
மொத்தமாக, 20 ஓவர்களில் 165-8 ரன்கள் எடுத்த டெல்லி, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், மகளிர் ஐபிஎல் தொடரில் சேசிங்கில் குறைந்த விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக டெல்லி சாதனை படைத்தது. இதற்கு முன், யூபி வாரியர்ஸ் 2 முறை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மும்பைக்கு அதிகபட்சமாக ஹைய்லே மேத்தியூஸ் மற்றும் எமிலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும், தோல்வியை தவிர்க்க முடியவில்லை.