மலையாள நடிகை பார்வதி, பூ, மரியான், உத்தமவில்லன், தங்கலான் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் பாலின சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து பேசி வரும் அவர், மலையாள சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “மலையாளத் திரையுலகில் பெண்கள் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. என்னைச் சுற்றி நிறைய பேர் இருந்தார்கள். செல்ஃபி எடுத்தனர். ஆனால் கூட்டமைப்பு உருவான பிறகு சர்ச்சைகள் எழுந்தன. அதன் பிறகு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. என் குரலை அடக்க அவர்கள் எனக்கு வாய்ப்புகள் தரவில்லை. வாய்ப்பு தராவிட்டால் அமைதியாகி விடுவேன் என்று நினைத்தார்கள். ஏற்கனவே என்னுடன் பணியாற்றியவர்களும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. அப்போதுதான் எனக்கு நம்பிக்கை கொண்டவளாக மாறினேன்” என்றார்.