பாரீஸ்:ஐரோப்பிய தலைவர்களை அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரான்ஸ் அதிபர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவசர கூட்டத்திற்கு ஐரோப்பிய தலைவர்களை அழைத்துள்ளார். நாளை (17.02) பாரீசில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் நேட்டோ அமைப்பிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதால் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கென தனி ராணுவம் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.