பீகார்: கும்பமேளா குறித்து லாலு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்படி அவர் என்னங்க சொன்னார் தெரியுங்களா?
டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசலில் சிக்கி கும்பமேளாவுக்கு செல்லவிருந்த 18 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தை லாலு பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாததே இதற்கு காரணம் எனக் கூறிய லாலு, இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கும்பமேளாவை அர்த்தமற்ற ஒன்று எனவும் அவர் விமர்சித்தார்.