சென்னை: ஆந்திரா தேர்தல் வியூகம் தமிழ்நாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. யாரால் என்று தெரியுங்களா?
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பாஜக கூட்டணியில் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் அதே போல் கூட்டணி இருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், விஜய் துணை முதல்வராகவும், பாஜக சார்பில் ஆளுநர் பதவியும் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தவெக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தவெக தலைவர் விஜய்யை சம்மதிக்க வைத்து விடலாம். அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்து ஆந்திரா போல் வியூகம் அமைக்கலாம் என்று பேசப்படுகிறதாம்.
இதற்கு தவெக தலைவர் விஜய் என்ன முடிவு எடுப்பார். கூட்டணி சேர்த்து தேர்தலை சந்திப்பாரா? அல்லது மக்களுடன் கூட்டணி என்று தனித்து நிற்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.