சென்னை : தேசிய கல்விக் கொள்கை குறித்து வரும் மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள சூழலில், மார்ச் 1 இல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், இந்த கையெழுத்து இயக்கம் மூலம், குழந்தைகளுக்கு விருப்பமான 3ஆவது மொழி எது என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக NEPஐ செயல்படுத்தாமல், அந்த நிதியை தமிழகத்திற்கு தர முடியாது என தர்மேந்திர பிரதான் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.