உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் ரிலீஸாகும் தமன்னா பட டீசர் வெளியிடப்படுகிறது.
தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் டீசர், மகா கும்பமேளாவில் வெளியாகிறது. தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அசோக் தேஜா இயக்கியுள்ளார்.
இந்நிலையில், உ.பி., பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் வரும் 22ஆம் தேதி டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. த்ரில்லர் கதைக்களத்தில் உருவான ஒடேலா முதல் பாகம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.