சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உடல் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை நடத்தும் திட்டம் 2023இல் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தற்போது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், முதற்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 16 வகை பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பிப்.28க்குள் விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது.