தஞ்சாவூர்: பாபநாசம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல் கனி தலைமையில் நடைபெற்றது. பாபநாசம்,அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கபிஸ்தலம் போலீஸ் சரக குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான மக்கள் நீதி மன்றத்தில் நிலுவை வழக்குகளை இரு தரப்பினரும் பேசி தீர்வு செய்து கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் மகாலெட்சுமி, உஷா, சகாய அன்பரசு, இளவரசன் மற்றும் மற்றும் நிலைய எழுத்தர்கள், நீதிமன்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.