‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் தனுஷ். தனுஷ் தயாரித்து இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டை முன்னிட்டு தனுஷ் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “‘ராயன்’ படத்திற்கு பிறகு நான் இயக்கிய படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. படம் தயாரிக்கும் போது நாங்கள் எவ்வளவு மகிழ்ந்தோம், அதைப் பார்க்கும்போது நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் இளைஞர்கள் அனைவரும் பல கனவுகளுடன் தங்கள் எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அந்த நேரத்தில் நான் அங்கு இருந்ததால், அந்த உணர்வு எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியும். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார் தனுஷ்.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இதில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லியோ பிரிட்டம் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.