புதுடில்லி: அந்நிய செலாவணி சட்ட விதி மீறல்களுக்காக பிரபல தொலைக்காட்சிக்கு ரூ.3.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி சட்டவிதி மீறல்களுக்காக பிபிசி டி.வி.க்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது. அதேபோல், பிபிசி டி.வி. இயக்குநர்கள் 3 பேருக்கு தலா ரூ.1.14 கோடி அபராதம் செலுத்தவும் அமலாக்கத்துறை ஆணையிட்டுள்ளது.
செய்தி ஒளிபரப்பும் நிறுவனங்களில் FDI உச்சவரம்பு 26%ஆக குறைக்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக 100% முதலீட்டுடன் பிபிசி இந்தியா டி.வி. செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.