சென்னை: 3 மாவட்டங்களில் வரும் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் இன்று, வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் மார்ச் 4இல் 3 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.