தமாகாவின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன். துணைத் தலைவர்கள் விடியல் சேகர், இ.எஸ்.எஸ். ராமன், பொதுச் செயலாளர் ஜி.ஆர். வெங்கடேசன் மற்றும் மாவட்ட, தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஜி.கே. வாசன் கூறியதாவது:-
இந்த ஆலோசனை கூட்டத்திற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த கட்ட ஆலோசனை கூட்டங்கள் பிப்ரவரி 28 மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தைப் பார்த்தால். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் மற்றும் வாக்கு வங்கிக்காக மத்திய அரசு குறித்த தவறான கருத்துக்களை மாநில அரசு திரித்து கூறக்கூடாது.
மூன்றாம் மொழியை யாரும் படிக்கக் கூடாது என்று சொன்னால், மற்ற மாநிலங்களில் உள்ள மற்றவர்கள் எப்படி தமிழ் மொழியைக் கற்க முன்வருவார்கள். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அரசியல். புதிய கல்விக் கொள்கையில் இந்த மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்று கூறவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தாய்மொழி அவசியம். தமிழ்நாட்டில் தமிழ் முக்கியம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இரண்டாவது மொழி ஆங்கிலம். அதில் மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம், வசதி படைத்தவர்கள் மட்டுமே மூன்றாம் மொழியைக் கற்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஏழைகளின் குழந்தைகள் வேறு மொழியைக் கற்கக் கூடாதா? மாணவர்கள் பிரச்னையில் தமிழக அரசு தனது அரசியலை திணிக்கும் வகையில் செயல்படுவது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தையும், பாலியல் வன்கொடுமைகளையும் மறைக்க மொழிப் பிரச்னையை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.