ஹிந்தி திரைப்பட இயக்குநரும் நடன இயக்குனருமான ஃபாரா கான், ஷாருக்கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். ஒரு சேனலில் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப்’ என்ற நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் ஹோலி பண்டிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது மும்பையைச் சேர்ந்த விகாஷ் பாதக் என்பவர் கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ஹோலி பண்டிகை குறித்து ஃபாரா கானின் கருத்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக உள்ளது. தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அவரது கருத்து இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்றார்.