சென்னை : மெஹந்தியை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க. அற்புதமான பலன்களை பெறுங்கள் என்று ஆலோசனை அளித்துள்ளனர் அழகு கலை நிபுணர்கள்.
நரை முடியை மறைக்க, மெஹந்தியை கிரீன் டீயில் ஊற வைத்து, தயிர், முட்டை சேர்த்து முடியில் தடவவும். 2-3 மணி நேரம் கழித்து கழுவவும் .
மெஹந்தியை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மெஹந்தி, வெந்தய தூள், பிராமி பவுடரை சேர்த்து முடியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.
மெஹந்தியுடன் தயிர் கொஞ்சம் தேன் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் போட்டு கழுவினால், இது ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனர். இவ்வாறு அழகு கலை நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.