இத்தாலி : இந்திய பிரதமர்மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப்- நான் பேசினால் ஆபத்தா? என்று இத்தாலி பிரதமர் மெலோனி கேள்வி எழுப்பினார்.
மோடி, டிரம்ப் மற்றும் தன்னைப் போன்ற தலைவர்களின் செயல்பாடுகள், இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
தேச நலன்களை பற்றி தாங்கள் பேசும்போது, ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக இடதுசாரிகள் கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் வெற்றி பெறுவது அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.