சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகி உள்ளார் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தலைமை சரியாக இல்லாததால் சரியான பாதையில் செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
நாம்தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலரும் விலகி வரும் நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.