கும்பகோணம்: கும்பகோணத்தில் டேக்வாண்டோ செமினார் மற்றும் பெல்ட் தேர்வு நிகழ்ச்சி நடந்தது.
கும்பகோணம் வாணிவிலா சபாவில் கும்பகோணம் டேக்வாண்டோ கிளப் சார்பாக டேக்வாண்டோ செமினார் மற்றும் பெல்ட் தேர்வு நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் டேக்வாண்டோ கிளப் சேர்மன் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கி சான்றிதழ்களை வழங்கினார்கள்.