வாஷிங்டன்: ரஷ்யாவுடனான உறவை பயன்படுத்தி இந்தியா போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. ரஷ்யாவுடனான உறவைப் பயன்படுத்தி இந்தியா போரை நிறுத்த வேண்டும்.
உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமாகக் கருதுகிறோம். இதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும்.
போருக்கு எதிராக ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த இந்தியா விரும்புகிறது. குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.