சென்னை : தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திடீர் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.
இதனால் பெண்கள் மத்தியில் திமுக அரசு நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.