வியன்னா: பிரதமர் மோடியை வரவேற்க ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மர் ‘செல்பி’ எடுத்தார்.
ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை அடைந்தார்.
ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர் உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர், கார்ல் நெகாமர் மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை சந்தித்து, இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து பேசினார்.