சென்னை : முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச திருமணம் நடக்க உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு (மார்ச்.1) சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெறுவதாக சேகர்பாபு அறிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டோருக்கு இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அரை பவுன் தங்க தாலி மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.