சென்னை : நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்த காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாதகவில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை எடுத்து அவர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காளியம்மாள் தமிழக வெற்றி கழகத்தின் எக்ஸ் பக்கத்தை ஃபாலோ செய்துள்ளார் இதனால் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளது உறுதியாகி உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளது தனக்குத் தெரியும் என சீமானும் கூறியுள்ளார்.
சிறந்த மேடைப் பேச்சாளரான காளியம்மாள் வருகை தவெகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். சிறப்பான துல்லியமான விவரங்களைக் கொண்டு காளியம்மாள் மேடைகளில் முழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.