காங்டாங்: சிக்கிம் சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணியின் டென்சிங் நூர்பு லாம்தா, ஆளும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தார். அதன்பிறகு சிக்கிம் எதிர்க்கட்சி இல்லாத சட்டசபையாக மாறியது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. 32 இடங்களை கொண்ட சிக்கிம் சட்டசபையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பிரேம்சிங் தமாங் முதல்வராக பதவியேற்றார்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., டென்சிங் நூர்பு லாம்தா, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திடீர் திருப்பமாக, டென்சிங் நூர்பு லாம்தா இன்று தனது கட்சியை கலைக்காமல் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவில் இணைந்தார். இதனால் சிக்கிம் சட்டசபை எதிர்க்கட்சி இல்லாத சட்டசபையாக மாறியது.