இந்தோனேசியா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் காலை 6.55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, வடக்கு சுலவேசி தீவு பகுதியில் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதாகவும், கடல்பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், தற்போது வரை பெரிய பாதிப்புகள் இல்லை எனவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.