ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேயில் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹராரேயில் தொடங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 66, ருத்ராஜ் கெய்க்வாட் 49, ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்தனர்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் 20 ஓவர் போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.