புதுடில்லி: மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி., தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்க நேரிடும்.
மே.வங்கம் 4, ஒடிஷா 3, கர்நாடகா 2, ஹிமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட் தலா ஒரு தொகுதிகளை இழக்கும். அதே நேரம் உ.பி.க்கு கூடுதலாக 11 தொகுதிகள் கிடைக்கும். இதனால் அங்கு எம்.பி தொகுதிகள் 91 ஆக உயரும். பிஹார் 10, ராஜஸ்தான் 6 தொகுதிகளை கூடுதலாக பெறும்.