இங்கிலாந்து: உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடனை இங்கிலாந்து வழங்கியுள்ளது.
அமெரிக்கா மறுத்த நிலையில், உக்ரைனுக்கு 2.26 பில்லியன் பவுண்ட்களை இங்கிலாந்து அரசு கடனாக வழங்கியுள்ளது.
டிரம்புடன் காரசாரமான விவாதம் நடத்திய பின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்துக்கு பயணம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உக்ரைனுடன் எப்போதும் துணை நிற்போம் என அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். மேலும், ஜெலன்ஸ்கி இன்று அரசர் சார்லஸை சந்தித்து பேச உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.