சென்னை : தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் அஞ்சாம் தேதி கையெழுத்து இயக்க தொடங்கப்படும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 1 கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வரும் 5ம் தேதி தமிழகத்தில் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக மக்களைக் குழப்ப வேண்டாம் எனவும், விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும் என்றும் கூறினார்.