நாமக்கல்: நாமக்கல்லில் இன்று சிக்கன், முட்டை விலை சரிவடைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் மற்றும் முட்டை விலை சரிந்துள்ளது. இதனால், இன்று (மார்ச் 2) மொத்த விலையில் கறிக்கோழி கிலோ ₹84க்கும், முட்டை ₹4.20 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
அதேநேரம், சென்னையில் கறிக்கோழி உயிருடன் சில்லறை விலையில் கிலோ ₹160க்கும், கறி ₹210க்கும், முட்டை ₹5க்கும் விற்கப்படுகிறது.
நுகர்வு குறைவால் சிக்கன் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.