சென்னை: வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இதனால் ரசிகர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் நாளை வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் 3 படமும் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரணின் கேம் ஜேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம், வேள்பாரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர் ” அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்க சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்ததுக்கு பிறகு வீட்டுல சும்மா இருந்த நேரத்துல படிக்கலாம்னு ஆரம்பிச்சேன்”.
“படிக்க படிக்க என் மனசுல காட்சிகளா விரிந்தது . படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணணும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கிவிட்டேன். வேள்பாரி 3 பாகங்களாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க என்பதை முடிவு பண்ணல” என கூறியுள்ளார். இத்தகவல் ரசிகர்களை வெகு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.