‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இப்படம் நிச்சயம் முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில், டீசரின் வரவேற்பு குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நான் ரசிகனாக ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கினேன்.
ரசிகர்கள் கொண்டாடும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அஜீத் சாரின் படத்தை போஸ்டர்கள், பேனர்கள் எல்லாம் வைத்து பார்த்தேன், அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. டீசரை பார்த்து அஜித் சார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாகும்” என்றார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தமிழக உரிமையை பெற்று ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடுகிறது.