புதுடெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு ஸ்பெஷல் சாதனையை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அப்படி என்ன ஸ்பெஷல் சாதனை தெரியுங்களா.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் 300 ஒரு நாள் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி நிறைவு செய்தார். 300 ஒரு நாள் போட்டிகளை நிறைவு செய்த 18 வீரர்கள் இருந்தாலும், அவர்களில் யாரும் படைக்காத ரெக்கார்டை விராட்கோலி படைத்துள்ளார்.
அதாவது, கோலி தவிர்த்து இவர்களில் யாரும் தங்கள் அணிக்காக 100 டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. அனைத்து ஃபார்மெட் சர்வதேச போட்டிகளிலும் தங்கள் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரராக விராட்கோலி உள்ளார்.
இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் விராட் கோலிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. கடந்த போட்டியில் அதிரடியாக சதம் அடித்து விராட் கோலி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.